உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை ரத்து:தீர்ப்பு முழு விபரம்!!

தமிழக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. வருகிற அக்டோபர் 17 மற்றும் 19 –ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மறு நாளே வேட்புமனு தாக்கல் என்று கூற இது பலத்த சர்ச்சைகளை

உருவாக்கியது. இதற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வந்த நிலையில் திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனுவில் “ உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. உதாரணத்துக்கு சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒன்றுகூட பழங்குடியினருக்கு ஒதுக்கப்படவில்லை. அதேபோல் தேர்தல் தேதியை அறிவித்த மறுநாளே வேட்புமனு தாக்கல் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமான போக்கு" என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு கடந்த வியாழன் அன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து “தேர்தல் அறிவிப்பாணை என்று வெளியிட்டீர்கள் ?” என்று கேட்டார் அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் “ 25-ம் தேதி” என்றார். அடுத்து கேட்ட நீதிபதி “வேட்புமனு தாக்கல் எப்போது எனக் கேட்டார்?” அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் “26-ம் தேதி” என்றார். மீண்டும் அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன் “உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் எப்போது அறிவிக்கப்பட்டது?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் “ 25-ம் தேதி இரவு பன்னிரெண்டே காலுக்கு ” என்றார். அடுத்து நீதிபதி “25-ம் தேதி தேர்தல் அறிவித்து, அதை இரவு பன்னிரெண்டே காலுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலமாகவும் அறிவித்து விட்டு மறு நாளே வேட்புமனுத்தாக்கல் என்றால் எப்படி செய்ய முடியும்” என்ற கேள்வியோடு அன்றைய விசாரணையை முடித்து கொண்டு ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை 4-ம் தேதி வழங்குவதாக தீர்ப்பை ஒத்து வைத்தார். இன்று இந்த வழக்கில் ,“தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்த உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி கிருபாகரன் இன்று அவர் அளித்த தீர்ப்பில் “ உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் அணையம் வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது.

தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் அறிவிப்பைச் செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர். ஆணிவேர் சரியாக இருந்தால்தான் ஜனநாயகம் வலுப்பெறும். புதிய தேர்தல் அறிவிப்பை ஆணையம் வெளியிடுவதற்கு முன்பு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்துக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும். கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது. உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறைப்படி செயல்படுத்த வேண்டும். பணம் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கக் கூடாது” என்று உத்தரவிட்டார் நீதிபதி கிருபாகரன்.தமிழக அரசு அறிவித்த தேதியில் மீண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றால் தனி நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சி தேர்தல் அரசாணையை ரத்து செய்து வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இரு நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்ற டிவிஞன் பெஞ்ச் முன்பு மேல் முறையீடு செய்து இத்தீர்ப்புக்கு தடை பெற்றால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலை அறிவித்த தேதியில் நடத்த முடியும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...