தற்காலிக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்....??? துணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி????

சென்னை: தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியதன் பின்னணியில் பரபரப்பு அரசியல் காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இன்று மதியம் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அவர் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பிய நிலையில், மாலை 6 மணியளவில், ஆளுநர் மாளிகைக்கு, மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கார்களில் வருகை தந்தனர். அப்போது ராமமோகன் ராவும் உடனிருந்தார்.
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என அப்பல்லோ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்கலாமா என்றும், துணை முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சீர் குலைந்துவிட்டதாக பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து ஆளுநருக்கு, கொடுக்கப்பட்ட சமிக்ஞைகளை தொடர்ந்து இதுபோன்ற தற்காலிக ஏற்பாடுகளை நோக்கி ஆளுநர் நகர்வுகள் அமைவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...