புதுடெல்லிஉத்தரபிரதேச ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.12½ லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் இரங்கல்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து பாட்னா சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே நேற்று அதிகாலையில்
தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். அவர்களின் குடும்பத்துக்கு மொத்தம் தலா ரூ.12½ லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த விபத்தால் மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இந்தூர்–பாட்னா ரெயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த துயரத்தால் வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன். தங்கள் உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களை இந்த நேரத்தில் நான் நினைத்து பார்க்கிறேன்’ என்று கூறியிருந்தார்.ரெயில்வே அமைச்சகம்
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் உடல் நலம்பெற பிரார்த்திப்பதாக கூறியுள்ள மோடி, விபத்து மீட்பு பணிகளை தனிப்பட்ட முறையில் கவனிக்குமாறு ரெயில்வே மந்திரியை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.மேலும் மத்திய ரெயில்வே அமைச்சகமும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3½ லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது. டெல்லியில் இதை தெரிவித்த ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, படுகாயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் கூறினார்.அகிலேஷ் யாதவ்
இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு மாநில மந்திரிகளை அனுப்பி வைத்த உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ், அங்கு மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். சம்பவம் நடந்த மாநிலம் என்ற முறையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய முதல் கடமை தங்களுக்கு இருப்பதாக கூறிய அவர், அந்த கடமைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்த அகிலேஷ் யாதவ், மீட்புப்பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் என்றார். இது தொடர்பாக ரெயில்வே மந்திரியுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறினார்.மத்திய பிரதேச அரசு
இதைப்போல மத்திய பிரதேச அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது. அத்துடன் தங்கள் மாநிலத்தை சேர்ந்த காயமடைந்த பயணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தங்கள் மாநிலத்தை சேர்ந்த மீட்புப் படையினரை அனுப்பியுள்ளதாக கூறிய அவர், காயமடைந்த தங்கள் மாநிலத்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.முன்னதாக இந்த விபத்து தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் சிவராஜ் சிங் சவுகான் ஆலோசனையும் நடத்தினார்.