ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களின் பணிச்சுமையை குறைக்கக்கோரி வழக்கு !!

அதிகாரிகள் உரிய முடிவு எடுக்க, ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை,ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களின் பணிச்சுமையை குறைக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் அதிகாரிகள் பரிசீலிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட்டில் மனுநாகர்கோவிலைச் சேர்ந்தவர் குமரிசெல்வன். தமிழ்நாடு

பொதுவினியோக ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொருளாளரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-நான் நாகர்கோவில் சரக்கல்விளையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஒரே ஒரு விற்பனையாளரை கொண்டே செயல்பட்டு வருகிறது. சில கடைகளில் விற்பனையாளர் இல்லாமல் உதவியாளர் மூலம் பணிகள் நடைபெறுகிறது.30 ஆண்டுகளுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட விற்பனையாளர்கள் இன்றுவரை பணியில் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் ரேஷன் கடைகளில் நுகர்வோர் வாங்கிய பொருட்கள் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் நுகர்வோருக்கு தகவல் அனுப்ப மின்னணு எந்திரம் வழங்கப்பட்டுள்ளது.வாய்மொழி உத்தரவுஇந்த எந்திரத்தை கையாள விற்பனையாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை. பெயரளவுக்கு ஒரு மணி நேர பயிற்சி மட்டுமே அளிக்கப்பட்டது. இந்த எந்திரத்தின் மூலம் நுகர்வோர் வாங்கிய பொருட்களுக்கு ரசீது தர இயலாது. இந்த எந்திரத்தில் ஆதார் அட்டை விவரங்களையும், குடும்ப அட்டையில் உள்ள சில விவரங்களையும் பதிவு செய்யும்படி விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.இதனால் விற்பனையாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் மாவட்ட வழங்கல் அலுவலரின் அலுவலகத்தில் உள்ள கணினியில் உள்ளது. அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன.பணிச்சுமை குறையும்எனவே, அந்த விவரங்களை ‘ஆன்லைன்’ மூலம் எளிதாக ரேஷன் கடைகளில் உள்ள எந்திரத்துக்கு மாற்றி விடலாம். இதனால் விற்பனையாளர்களின் பணிச்சுமை குறையும். நுகர்வோர்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்ற முடியும்.எனவே, மாவட்ட வழங்கல் அலுவலரின் அலுவலக கணினியில் உள்ள நுகர்வோர் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் ‘ஆன்லைன்’ மூலம் ரேஷன் கடைகளில் உள்ள எந்திரத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். அதேபோன்று தற்போதுள்ள எந்திரத்தை நுகர்வோர்களுக்கு ரசீது வழங்கும் வகையில் மாற்றி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இதேபோன்று ரேஷன்கடை விற்பனையாளர்கள் ஜெய்சன்மகேஷ், வினோத், ஜெயசேகர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.உரிய முடிவு எடுக்க உத்தரவுஇந்த மனுக்களை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். அப்போது அரசு வக்கீல், ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களின் பணிச்சுமையை குறைக்க ‘இன்டர்நெட்’ வசதியுடன் கூடிய கணினி எந்திரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கையை நிறைவேற்றி 6 வாரத்துக்குள் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...