மைக்ரோ ஏ.டி.எம்.,கள்!!

ஏ.டி.எம்., மையங்­களில், ரூபாய் நோட்டு தட்­டுப்­பாட்டை சமா­ளிக்கும் வகையில், மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக, மைக்ரோ, ஏ.டி.எம்.,களும் கிரா­மப்­புறங்கள், சிறிய நக­ரங்­களில் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. மைக்ரோ ஏ.டி.எம்.,கள் என்றால் என்ன, அவை எப்­படி செயல்­ப­டு­கின்­றன, இவற்றின் மூலம் பெறக்­கூ­டிய சேவைகள் பற்றி ஓர் அறி­முகம்:


கைய­டக்க சாதனம்!மைக்ரோ, ஏ.டி.எம்., என்­பவை, உண்­மையில் கார்டு பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்ள பயன்­ப­டுத்­தப்­படும், கைய­டக்க சாதனம் போன்­றவை தான். இவை, வங்­கி­களின் மைய வங்கி அமைப்­புடன் இணைக்­கப்­பட்டு, கைரேகை ஸ்கேன் செய்யும் வச­தியும் பொருத்­தப்­பட்­டி­ருக்கும். வங்­கி­களால் கிளைகள் அல்­லது ஏ.டி.எம்., வசதி அமைக்க முடி­யாத தொலை துார பகு­தி­களில், பணம் வழங்­கு­வது உள்­ளிட்ட அடிப்­படை வங்கிச் சேவை­களை அளிக்க முடியும். இவையும், கடை­களில் பார்க்கும் கார்டு இயந்­தி­ரங்கள் போன்­றவை தான்.
எப்­படி செயல்­ப­டு­கின்­றன?ஏ.டி.எம்., போலவே, இவற்றில் டெபிட் கார்டு (ஸ்மார்ட் கார்டு) பயன்­ப­டுத்­தலாம். வங்­கிகள் நிய­மித்­துள்ள வர்த்­தக பிர­தி­நி­திகள், இவற்றை கையாள்வர். அவர்கள் மூலம் பணம் பெற்றுக் கொள்­ளலாம். வர்த்­தக பிர­தி­நி­திகள், வாடிக்­கை­யா­ளர்­களின் அடை­யா­ளத்தை உறுதி செய்து கொள்ள, கைரேகை ஸ்கேனிங் வசதி மற்றும் ஆதார் எண்ணை பயன்­ப­டுத்திக் கொள்வர். மேலும், வங்­கிகள் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள, ஐ.ஐ.என்., எனும் ஆறு இலக்க அடை­யாள எண்ணும் அவ­சியம். ஆதார் எண் இணைக்­கப்­பட்ட வங்கிக் கணக்கை, இந்த எண் உணர்த்­து­கி­றது.
நோக்கம்!வங்கிச் சேவையை,குக்­கி­ரா­மங்கள் மற்றும் எளிதில் செல்ல முடி­யாத தொலை­த்துார பகு­தி­க­ளுக்கு கொண்டு செல்ல இவை உத­வு­கின்­றன.
சாத­கங்கள்: பாத­கங்கள்!* ஏ.டி.எம்.,களை விட, இவற்றை நிறுவ ஆகும் செலவு, மிகவும் குறை­வா­னது. எனவே, தொலை­த்துார பகு­தியில் அமைக்­கலாம். கைய­டக்க சாதனம் என்­பதால், எல்லா பகு­திக்கும் கொண்டு செல்­லலாம்* ஏ.டி.எம்., என்­றாலும், எந்த நேரமும் பணம் பெற முடி­யாது. வங்கி பிர­தி­நிதி இருக்கும் போது மட்­டுமே, பணம் எடுக்­கவோ, பரி­வர்த்­தனை செய்­யவோ முடியும். வங்கி பிர­தி­நிதி வெளியே சென்று விட்டால் அல்­லது கடை அடைக்­கப்­பட்­டி­ருந்தால் பயன்­ப­டுத்த முடி­யாது.

என்ன வச­திகள்!பணம் செலுத்த, பணம் எடுக்க மைக்ரோ, ஏ.டி.எம்.,களை பயன்­ப­டுத்­தலாம். பணம் செலுத்­து­வது என்றால், கார்டை இயக்­கி­விட்டு, பணத்தை பிர­தி­நி­தி­யிடம் வழங்க வேண்டும். பணப் பரி­மாற்றம் மற்றும் கணக்கில் மிச்­ச­முள்ள தொகையை அறி­யவும், இவற்றை பயன்­ப­டுத்­தலாம். கடன் வழங்­குதல், கடன் வசூ­லித்தல் போன்­ற­வையும் மேற்­கொள்­ளலாம். இந்த சேவை பாது­காப்­பா­னது. அரசு நல திட்ட பயன்­களை அளிக்­கவும் பயன்படுத்தலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...