2000 செல்லாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம்பெற்றுள்ளதால் அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நமது மின்னம்பலம் இணைய இதழில், புதிய ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம்பெற்றுள்ளதையும், தேவநாகரி எண்களை அரசு அலுவல்களில்

பயன்படுத்துவது குறித்து சட்டம் என்ன கூறுகிறது என்பதையும் விளக்கும்வகையில் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். https://minnambalam.com/k/1478802616. நாம் எதிர்பார்த்ததுபோலவே அந்தப் பிரச்னை இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த கே.பி.டி.கணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுகுறித்து வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த மனுவில், ‘புழக்கத்தில் இருந்த 500, 1,000 நோட்டுகள் செல்லாது என நவ.8ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. பின்னர், 2 ஆயிரம் நோட்டு புதிதாக வெளியிடப்பட்டது. இந்த நோட்டில் சர்வதேச பயன்பாட்டிலுள்ள எண் வடிவங்களுக்குப் பதிலாக தேவநாகரி வடிவத்தில் எண்கள் இடம்பெற்றுள்ளன. இந்தி ஆட்சி மொழியாக இருந்தாலும், எண்களைப் பொருத்தவரை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவங்களையே பயன்படுத்த வேண்டும் என்பதுதான் சட்டம். சட்டத்தில் அனுமதிக்கப்படாத தேவநாகரி எண்களை 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் அச்சிட்டுள்ளனர். இதற்கு ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுவிடம் அனுமதி பெறவில்லை. ஏற்கனவே, இயக்குநர்கள் குழுவில் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புதிதாக வெளியிட அனுமதி கோரப்பட்டது. அப்போது 2 ஆயிரம் நோட்டுக்கு அனுமதி கேட்கவில்லை. பின்னர், புதிய நோட்டுகள் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டது. அனுமதிபெறாத நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிட்டது சட்டவிரோதம். எனவே, புதிதாக வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...