ஒடிசாவில் உள்ள மல்கன்கிரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் ஜப்பான் மூளை அழற்சிக்கு 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மல்கன்கிரி மாவட்ட எல்லை பகுதியில் வாழ்பவர்கள் அனைவருமே மலைவாழ் மக்கள். இங்கு போதுமான சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி கிடையாது. அதனால்தான், ஜப்பான் மூளை அழற்சி நோயால் 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ‘ஜப்பானீஸ் என்சிபாலிட்டிஸ்’ என்னும் வைரஸ் கொசு இந்த நோயை பரப்புகிறது. ஆனால், மாநில அரசு அதிகாரிகள் விஷ விதைகளை சாப்பிட்டுத்தான் குழந்தைகள் இறந்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து மனித உரிமை அமைப்பினர் கூறுகையில், “இங்கே இருக்கின்ற கனிம வளங்களை மட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பிரித்து கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்ற மத்திய, மாநில அரசுகள் இங்கு வாழும் மலைவாழ் மக்கள் பற்றி சிறிதும் அக்கறை கொள்வது இல்லை. அதுமட்டுமல்லாமல், ஒருபுறம் மலைவாழ் மக்களை நக்சலைட்டுகள் என்று சொல்லி கொள்கின்றனர். அதன்படி, இதுவரை 30 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மற்றொரு புறம், அவர்களுக்கு அடிப்படை வசதிகளைக்கூட செய்து தராமல் இத்தனை குழந்தைகள் பலியாவதற்குக் காரணமாக இருக்கின்றனர். இதன்மூலம், அரசு ஒட்டுமொத்த மலைவாழ் மக்களை கொல்லும் வேலை செய்து வருகிறது” என்று குற்றம் சாட்டுகின்றனர்.
300 குழந்தைகள் இறந்தும் அரசு மௌனமாக இருப்பது பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில், டெங்கு காய்ச்சலுக்கு திருத்தணி உள்ளிட்ட இடங்களில் பதினைத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் பலியாகியும் அரசு மௌனமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.