புதிய நோட்டு தான் வேண்டும் என கேட்டு ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி சிக்கினார்!!!

புனே,கோலாப்பூரில் புதிய நோட்டு தான் வேண்டும் என கேட்டு ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி அதிகாரி சிக்கினார்.புதிய நோட்டு தான் வேண்டும்

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் சோம்நாத்
(வயது52). இவர் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கேட்டு, கோலாப்பூர் மாவட்ட கல்விதுறை அதிகாரியிடம் மனு கொடுத்தார்.மனுவை பரிசீலித்த கல்விதுறை அதிகாரி சந்திரகாந்த் ஏக்நாத் (வயது45) ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் பதவி உயர்விற்கு அரசிடம் சிபாரிசு செய்வதாக கூறினார். மேலும் லஞ்ச பணம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக வேண்டும் என்றார்.கையும் களவுமாக பிடிப்பட்டார்

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சோம்நாத் கோலாப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனையின் படி சோம்நாத் நேற்று மாலை 6 மணியளவில் வங்கியில் இருந்தும், உறவினர்களிடம் இருந்து வாங்கிய ரூ.35 ஆயிரத்தை கல்விதுறை அதிகாரியான சந்திரகாந்த் ஏக்நாத்தை சந்தித்து கொடுத்தார்.புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கி ஆர்வமாக எண்ணிக்கொண்டு இருந்த சந்திரகாந்த் ஏக்நாத்தை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 17 புதிய 2000 ரூபாய் நோட்டுகளையும், 100 ரூபாய் நோட்டு 10–யையும் பறிமுதல் செய்தனர்.லஞ்ச ஒழிப்புத்துறையினர் சந்திரகாந்த் ஏக்நாத் மீது வழக்குப்பதிவு அவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...