கடன் தவணை செலுத்த 60 நாள் அவகாசம் ரிசர்வ் வங்கி !!

பணம் தட்டுப்பாடு எதிரொலி வீடு, கார் மற்றும் கல்வி கட்டணத்திற்காக வாங்கிய கடன் தவணை செலுத்த 60 நாள் அவகாசம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

நாட்டில் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் வீடு, கார் மற்றும் கல்வி கட்டணத்திற்காக வாங்கிய கடனுக்கான தவணை தொகையை செலுத்த 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.


மும்பை,

நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8–ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார்.பணம் தட்டுப்பாடு

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நாட்டில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வங்கிகளில் இருந்து போதிய பணம் எடுக்க முடியாததாலும், பெரும்பாலான ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாததாலும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதனால் அன்றாட செலவுகளுக்கே போதிய பணம் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இதை கருத்தில் கொண்டு வீடு, கார் போன்றவை வாங்குவதற்காகவும், கல்வி கட்டணம் செலுத்துவதற்காகவும் மற்றும் பிற தேவைகளுக்காகவும் கடன் வாங்கி இருப்போர், அதற்கான தவணை தொகையை செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்து இருக்கிறது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–60 நாட்கள் அவகாசம்

வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களில் ரூ.1 கோடி வரை வீட்டுக்கடன், கார் கடன், விவசாய கடன், கல்வி கடன், குறித்த காலத்தில் செலுத்த வேண்டிய தொழில் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களை வாங்கி இருப்போர் அதற்கான தவணை தொகையை செலுத்த 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

அதாவது கடந்த 1–ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 31–ந் தேதி வரை செலுத்த வேண்டிய தவணை தொகைக்கு இந்த கால அவகாசம் பொருந்தும். அனைத்து வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் இந்த அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும்.

இந்த கால அவகாசத்தின் காரணமாக கடன் தொகையை திருப்பி செலுத்தும் நடைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதாவது கடன்களை மறுசீரமைக்க இந்த சலுகை பொருந்தாது என்பதை கடன் வழங்கிய நிறுவனங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

வரவேற்பு

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை பிரபல வீட்டு வசதி கடன் நிதி நிறுவனமான டி.எச்.எப்.எல். வரவேற்று உள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷில் மேத்தா கூறுகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பண நெருக்கடியின் காரணமாக கடன் தவணை தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த இயலாத நிலையில் இருப்பதாக பல வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...