உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ரயில் விபத்துக்கு பிறகு, ரயில் பயணிகளுக்கான காப்பீடு திட்டத்தை கட்டாய நடைமுறையாக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 92 காசு பிரீமியத்தில் ரயில் காப்பீடு திட்டம் கடந்த செப்டம்பரில்
அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தின் மூலம் ரயில் விபத்து ஏற்பட்டால் காயம், ஊனம், இறப்புக்கு ஏற்ப ரூ.10 லட்சம் வரையிலான காப்பீட்டு பலன் கிடைக்கும். ஐஆர்சிடிசியில் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் விருப்ப அடிப்படையில் இந்த காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.
தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் மாதத்துக்கு மட்டும் இந்த பிரீமியம் ஒரு காசாக குறைக்கப்பட்டது. தற்போது விருப்ப அடிப்படையில் உள்ள இந்த காப்பீடு, இனி கட்டாயமாக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
“விரைவு ரயில்களில், ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் வடிவைமக்கப்பட்டுள்ள எல்எச்பி பெட்டிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படுகின்றன. சுமார் 51.7 டன் எடையுள்ள இந்த பெட்டிகள் அதிர்வு இல்லாமலும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். சொகுசு இருக்கை, மொபைல் சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. 120 கிலோ மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக செல்லும் விரைவு ரயில்களில் இதை பொருத்துவது பயணிகளின் பாதுகாப்பு உத்தரவாதம் தருவது மட்டுமின்றி, நீடித்து உழைக்க வல்லது.
ஆனால், அனைத்து ரயில் பெட்டிகளையும் இவ்வாறு மாற்ற 30 ஆண்டு ஆகலாம். எனவே, சமீபத்திய கான்பூர் ரயில் விபத்தை தொடர்ந்து, தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் காப்பீடு வசதியை ஆன்லைனில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கும் இதை விரிவுப்படுத்த பரிந்துரை வந்துள்ளது. இது ஏற்கப்பட்டால் ரயில்வேயின் காப்பீடு வர்த்தகம் ரூ.3,500 கோடியை எட்டும்” என்றனர்.