தமிழகத்தில் இன்று முதல் உணவு பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வருகிறது. நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம் பல மாநிலங்களுக்கு சாதகமானது என்றபோதிலும், தமிழகத்துக்கு மிகவும் பாதகமானது என்று கருதப்பட்டது. ஆகவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தச் சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தார். இந்தச்
சட்டத்தை தமிழகம் மற்றும் கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் கேரள மாநிலம் சமீபத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து தமிழகமும் இத்திட்டத்தில் தற்போது இணைந்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொது விநியோக திட்டத்தின்கீழ் இலவச அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை பெறுபவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியின் அளவு இதோ: ஒரு உறுப்பினரைக் கொண்ட குடும்ப அட்டைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 12 கிலோ அரிசியே தொடர்ந்து வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் 5 கிலோ மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அளவிலேயே அரிசி இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேபோல் 2, 3 மற்றும் 4 உறுப்பினர்களைக் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அளவிலேயே அரிசி வழங்கப்படும். 5 உறுப்பினர்களைக் கொண்ட குடும்ப அட்டைக்கு 20 கிலோவில் இருந்து 25 கிலோவாக உயர்த்தி வழங்கப்படும். 6 உறுப்பினர்களுக்கு 30 கிலோவும், 7 உறுப்பினர்களுக்கு 35 கிலோவும் அரிசி வழங்கப்பட இருக்கிறது.10 உறுப்பினர்களுக்கு 50 கிலோ அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.