தமிழகத்தில் பார்வை குறைபாடு, மாலைக்கண் போன்ற நோய்களைத் தடுக்க தமிழக அரசு சார்பில் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வரும் 14ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் சுவாமிநாதன், “ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வைட்டமின் ஏ சொட்டு மருந்து வரும் 14ஆம் தேதி வரை வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார். இதன்மூலம் பார்வை குறைபாடு, மாலை கண் போன்ற நோய்கள் வராமல் தடுக்க, இந்த சொட்டு மருந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில், பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 4.7 சதவிகித மாணவர்களுக்கு பார்வை குறைபாடு உள்ளது என கடந்த 2009ஆம் கண்டறியப்பட்டு, அம்மாணவர்களுக்கு திமுக ஆட்சியில் கண்ணாடி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது நினைவு இருக்கலாம்.
பார்வை குறைபாடு வரக் காரணம்:
“தாய் வயிற்றில் சிசு இருக்கையில் ஏதாவது நோய் வந்தால் அது சிசுவின் கண்ணைப் பாதிக்க வாய்ப்புள்ளது. அதில் TORCH என சொல்லப்படும் நோய்கள் சின்னம்மை, ருபெல்லா போன்றவை தாய் கருத்தரித்து மூன்று மாதங்களுக்குள் நோய் தொற்று ஏற்பட்டால் பிள்ளையின் கண் பாதிக்க வாய்ப்புள்ளது. தாயும் தந்தையும் நெருங்கிய உறவில் திருமணம் செய்திருந்தால் குழந்தைகளுக்கு கண் பார்வை பிறப்பிலேயே குறைய வாய்ப்புள்ளது” என்கின்றனர் மருத்துவர்கள்.