ஜாமீன் மனு மீது முடிவெடுக்க நீண்ட அவகாசம் தேவை இல்லை என்று கீழ்கோர்ட்டுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தள்ளிவைப்பு
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் டிசம்பர் 31–ந் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பணத்தட்டுப்பாட்டை கண்டித்து ஏ.டி.எம். மையத்தை முற்றுகையிட்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமரின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு, போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிலரை கைது செய்தனர்.கைதான 14 பேர் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 9–ந்தேதிக்கு செங்கல்பட்டு கோர்ட்டு தள்ளிவைத்தது.சுதந்திர கட்டுப்பாடு
எனவே 14 பேரும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–ஜாமீன் கேட்டு 5–ந்தேதி தாக்கல் செய்த மனுவை எந்தவொரு காரணமும் சொல்லாமல் 9–ந் தேதிக்கு எந்திரத்தனமாக தள்ளிவைத்ததை ஜீரணிக்க முடியவில்லை. ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுதான் செய்ய வேண்டும்.இந்த வழக்கிற்கான விளக்கத்தை பெறுவதற்கு அரசு தரப்பிற்கு ஒரு நாள் காலஅவகாசம் அளித்திருக்க முடியும். ஆனால் அரசு வக்கீல் கேட்டுக்கொண்டார் என்பதற்காக 4 நாள் காலஅவகாசம் வழங்கியிருப்பது ஏற்புடையது அல்ல.நியாயமாக இருக்கவேண்டும்
இடையில் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்கள் வருகின்றன. நீண்ட அவகாசம் வழங்க இது கடினமான வழக்கு அல்ல. ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நியாயத்தோடும், காரணத்தோடும் இருக்கவேண்டும்.ஜாமீன் மனு மீது முடிவெடுப்பதற்கு முன்பு இரண்டு தரப்புக்கும் சரியான காலஅவகாசத்தை வழங்கவேண்டுமே தவிர, நீண்ட அவகாசம் தேவையற்றது. இந்த வழக்கில் 14 பேரின் ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அவற்றை இங்கு விசாரிக்க முடியாது. மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது