தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல்கூட்டம் ஆளு நர் உரையுடன் நேற்று தொடங்கியது. உரையின் முக்கிய அம்சங்கள்:
* காலை 9.20 மணி முதலே உறுப்பினர்கள் பேரவைக்குள் வந்து அமரத் தொடங்கினர்.
* முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 9.43 மணிக்கு அவைக்குள் வந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், பேரவைத் துணைத் தலைவர்கள் வந்தனர்.
* காலை 9.48 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் வந்தனர். ஸ்டாலினும், துரைமுருகனும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவித்தார்.
* 10.03 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேரவைக்குள் நுழைந்தார். அவரை பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் அழைத்து வந்தனர்.
* 10.04 மணிக்கு தனது ஆங்கில உரையை தொடங்கிய ஆளுநர். 11.50 மணிக்கு முடித்தார். அதன்பின் ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை பேரவைத் தலைவர் தனபால், பகல் 11.45 மணிக்கு வாசித்து முடித்தார்.
* முதல்வர் இருக்கையில் ஓபிஎஸ் *
* சட்டப்பேரவைக்கு காலை 9.43 மணிக்கு வந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வழக்கமாக முதல்வருக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் அமர்ந்தார். ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதும், அவர் பதவியில் இல்லாத காலங்களிலும் தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், பேரவையில் முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்த தில்லை. தற்போது ஜெயலலிதா இல்லாத நிலையில், முதல்வராக பதவி வகிக்கும் ஓபிஎஸ், முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனால், அமைச்சர்களின் இருக்கை வரிசையும் மாறியது. 2-வது வரிசையில் இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன் முதல் வரிசைக்கு வந்தார்.
வார்தா புயல் நடவடிக்கைக்கு பாராட்டு
* 2016 டிசம்பரில் வார்தா புயலின் கோர தாண்டவத்தில் இருந்து குறுகிய காலத்தில், இயல்புநிலை திரும்ப, மாநில அரசு ஒருங்கிணைந்த முறையில் மிக சிறப்பாக, துரிதமாக செயல்பட்டது பாராட்டுக்குரியது.
* கடலோரப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் நீண்டகால இலக்கை எட்ட, சூரை மீன்பிடித் தூண்டில் படகுகள் மூலம் மீன்பிடிப்பதை அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும்.
* இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு பொதுச்சேவைகளை மக்கள் தங்கு தடையின்றி எளிதாகப் பெற வழிவகை செய்யப் பட்டுள்ளது. அதைப் பாராட்டும் வகையில், கடந்த ஆண்டு சிறந்த மின்னணு முயற்சிக்கான ‘டிஜிட்டல் இந்தியா’ விருதை, தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
* சென்னையில் 2015 செப்டம்பரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில், 3 முதல் 7 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்ய 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
* சென்னை - விசாகப்பட்டினம் தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடத்தையும் மத்திய அரசு மேம்படுத்த வேண்டும்.
* சென்னை - குமரி தொழில் வழித்தடத் திட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் நெடுவழி கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன்மூலம் பெரிய அளவிலான தொழில் திட்டங்களை தென் தமிழகப் பகுதிகளில் அமைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
* ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் - 2023’ ஆவணத்தில் திட்டமிடப்பட்ட சென்னை -ராணிப்பேட்டை மற்றும் ராணிப்பேட்டை - ஓசூர் தொழில் வழித்தடங்கள், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொன்னேரியை ஒரு வளரும் தொழில் மையமாக உருவாக்குவதற்கான ஆரம்பப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
* முக்கிய துறைகளில் தலைமை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், உயர் திறன் பயிற்சி அளிக்கவும் முன்னோடி முயற்சியாக அரசு - தனியார் தொழில்துறையினரின் பங்களிப்பில் மாநில அளவிலான பயிற்சி மையங்கள் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் அமைக்கப்படும்.