அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் பிரணாப்பை சிந்திக்க அதிரடி முடிவு.
இடைக்கால பொதுச்செயலாரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்டவிதிகளில் இல்லை.அதிமுகவின் சட்டவிதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொதுச்செயலாரை நியமிக்க முடியும்.சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து கொடுக்கப்பட்ட மனுக்களை ஆராய்ந்து இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக கட்சிக்கு அதிரடியாக தெரிவிக்க உள்ளது.
அதிமுக என்ற மாபெரும் சக்தியை யாராலும் வீழ்த்த முடியாது. யார் பின்பும் செல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 48 மணி நேரத்தில் ஒபிஎஸ் மனம் மாற என்ன காரணம்? அவர் பின் திமுக இருப்பது கண்கூடான உண்மை. ஜெயலலிதாவின் சக்தி நம்முடன் உள்ள வரை நம்மை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என இன்று நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலா பேச்சு.
வீதி வீதியாக சென்று மக்களை சந்திப்பேன் ஆளுநர் சென்னை திரும்பியவுடன் அவரை சந்திப்பேன் சட்டமன்றதில் உறுதியாக என்னுடைய பலம் தெரியும் என்னை பாஜக இயக்குகிறது என்பது முற்றிலும் பொய் - முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம்.
சட்டமன்றத்தில் உறுதியாக என்னுடைய பலம் தெரியும் ஜெயலலிதா அண்ணன் மகள் என்ற முறையில் தீபவிற்கு மதிபளிக்கிறேன்
என்னுடன் இணைந்து செயல்பட தீபாவிற்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று வருவார்கள் என ஒபிஎஸ்ஸூக்கு ஆதரவளித்துள்ள சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தகவல்.
இரு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒபிஎஸ் இல்லம் வந்தனர் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் ஒபிஎஸ்க்கு ஆதரவு.
60க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஒபிஎஸ்க்கு ஆதரவு என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை அறிக்கை தவறு என்று வழக்கறிஞர் துரைசாமி கூறியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் உண்மையாக ராஜினாமா செய்தாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பார்த்து ஏறுக்கொண்டாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் துரைசாமி கூறியுள்ளார்.
முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்துவது சசிகலாவின் கடமை - தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
அராஜக கும்பலிடம் இருந்து தமிழகத்தை ஓபிஎஸ் தலைமையில் காப்பாற்றுவோம் - சசிகலா புஷ்பா.
சசிகலா இப்போது மட்டுமல்ல எப்போதும் முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது : ஜெ. தோழி கீதா பேட்டி.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது இதனால் விசாரணைக் கமிஷனை அமைப்பதை வரவேற்கிறேன் என்று ஜெயலலிதா தோழி கீதா கூறியுள்ளார். பன்னீர் செல்வத்தை மிரட்டித்தான் கையெழுத்து வாங்கியுள்ளனர் என ஏற்கனவே கூறினேன். மேலும் இப்போது மட்டுமல்ல எப்போதும் சசிகலா முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது என்று ஜெயலலிதா தோழி கீதா கூறியுள்ளார்.
நட்சத்திர ஓட்டலில் எம்எல்ஏக்களை தங்க வைக்க சசிகலா ஏற்பாடு செய்து வருகிறார்.
ஓபிஎஸ் ஜெ.தீபா பேட்டியின் அடிப்படையில் சசிகலா மீது வழக்கு பதிய வேண்டும் : டிராபிக் ராமசாமி : நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி மகாதேவன் தெரிவித்தார்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 130 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக செங்கோட்டையன் தகவல் 110 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக மற்றொரு தகவல்.திவாகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மாணவர்கள் கூடுவதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வருவதால் மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.
தமிழகத்தின் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சட்ட விதிமுறைகளை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவிப்பு.
முன்னால் அதிமுக எம்எல்ஏ இளவழகன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சசிகலா கொடும்பாவியை எரித்து எதிர்ப்பினை தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த சசிகலா ஆதரவாளர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள், இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்ப்பட்டது.
அதிமுக என்ற மாபெரும் கட்சியை யாராலும் வீழ்த்தி விடமுடியாது ஜெ.வின் சக்தி நம்மிடம் உள்ளதால் வேறு எந்த சக்தியும் ஒன்றும் செய்துவிட முடியாது ஜெ காட்டிய வழியில் அனைவரும் செல்ல வேண்டும் அதிமுக எம்எல்ஏக்களை கட்டாயபடுத்தி யாரிடமும் கையெழுத்து வாங்கவில்லை ஓபிஎஸை பின்னணியில் இருந்து இயக்குவது திமுக தான் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது - சசிகலா தகவல்.
முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் ஒபிஎஸ்க்கு ஆதரவு பெருகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் இல்லங்களை கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் முற்றுகையிடுவார்கள் என கிடைத்த தகவல்களால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு முன் காவல்துறையினர் பாதுகாப்பு.
பொதுமக்களுக்கும் இந்த பிரச்சினைகளுக்கும் சம்பந்தமில்லை வாக்களித்தவுடன் அவர்கள் பணி நிறைவுற்றது. பின் முதல்வர் யார் என்பதெல்லாம் எங்கள் உரிமை, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மித்த ஆதரவு சின்னம்மாவுக்கே உண்டு - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து பொதுச்செயலாளர் சசிகலா போயஸ் கார்டன் புறப்பட்டார்.
யாரோ பின்னால் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குகின்றனர். தமிழக மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு சசிகலா செயல்படுவார். தூண்டுதலே ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சுக்குக் காரணம் - அதிமுக மூத்த தலைவர் செம்மலை.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு வரவேற்புக்குரியது
ஓபிஎஸ்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன் - சசிகலா புஷ்பா.
குறுக்கு வழியில் முதலமைச்சராக முடியாத ஏக்கத்தில் எதைத் தின்னால் பித்தம் தெளியும்என போலி விமர்சனத்தை திமுக மீது சசிகலா நடராஜன் வீசுகிறார் -முக.ஸ்டாலின்.
விரைவில் அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெறும் - முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
சசிகலா மீது நான்தான் எப்.ஐ.ஆர்., போட வைப்பேன் சசிகலா குடும்பத்தினருக்கு பணமே பிரதான குறிக்கோள் தவறான மருந்தை கொடுத்ததால் ஜெ மரணம் இந்தியா டுடே இன்று மாலை ஜெ மரணம் குறித்து முக்கிய செய்தி வெளியிட உள்ளது -பிஹெச்.பாண்டியன் பேட்டி.
கட்டாயப்படுத்தப்பட்டேன்' என்று ஓபிஎஸ் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது : சரத்குமார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அல்ல என்று முன்னாள் எம்.பி. பழனிச்சாமி கூறியுள்ளார். அதிமுகவையும் கட்சியின் சொத்துக்களையும் தொண்டர்களே கைப்பேற்றுவார்கள் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு இல்லை என முன்னாள் எம்.பி. பழனிச்சாமி சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.