பஞ்சாப், கோவாவில் இன்று வாக்குப்பதிவு!!!

பஞ்சாப், கோவா மாநில சட்டப் பேரவைகளுக்கு சனிக்கிழமை (பிப்.4) தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாப் சட்டப் பேரவையில் உள்ள 117 தொகுதிகளுக்கும் சனிக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் வியாழக்கிழமையுடன் முடிந்தது. இந்தத் தேர்தலில், பஞ்சாபை ஆளும் சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி,
காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 3 கட்சிகளும் ஆட்சியைக் கைப்பற்றுவதில் தீவிர கவனம் செலுத்துகின்றன.
கோவா சட்டப் பேரவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சனிக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் 1,642 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. கோவா தேர்தலில், முன்னாள் முதல்வர்கள் 5 பேர் போட்டியிடுகின்றனர். இதேபோல், தற்போதைய முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகரும் களத்தில் உள்ளார்.
கோவா தேர்தலில் முதல்முறையாக பலமுனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, கோவாவை ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, எம்ஜிபி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் என்று பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கோவா தேர்தலில், ஆம் ஆத்மி முதல்முறையாக களத்தில் குதித்துள்ளது. அக்கட்சி மொத்தம் 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 38 தொகுதிகளிலும், பாஜக 37 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 2012ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை அக்கட்சி தனித்து களம் காண்கிறது. கோவா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், அந்த மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்பார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்னணு வாக்குப்பதிவு முறை: இதனிடையே, புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்குப்பதிவு செய்யும் முறை (தொலை தூரத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள் போன்றோருக்கு மின்னணு முறை மூலம் வாக்குச்சீட்டு அனுப்பப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெறுதல்), கோவா, பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் அமல்படுத்தப்படுகிறது. கோவாவில் அனைத்துத் தொகுதிகளிலும், பஞ்சாபில் 5 தொகுதிகளிலும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...