சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தனது ஸ்பிட்சர் எனப்படும் அதிநவீன தொலைநோக்கி மூலமாக டிராப்பிஸ்ட் 1 என்ற சூரியனைப் போன்று புதிய நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தைச் சுற்றி பூமியை
போன்றே ஏழு கோள்கள் வலம் வருவதாக கண்டுபிடித்துள்ளது. சில கோள்களில் நீர் இருப்பதற்கும் உயிர்கள் வாழ்வதற்கும் சாத்தியகூறுகள் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
கற்பனைக்கு எட்டாதது
இந்த நட்சத்திர குடும்பம் நாம் வாழும் பூமியிலிருந்து 39 ஒளிவருட தூரத்தில் அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒளியின் வேகத்தில், அதாவது நொடிக்கு 3லட்சம் கி.மீ., வேகத்தில் நிற்காமல் பயணம் செய்தாலும் டிராப்பிஸ்டை அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.
நாசா விண்கலத்தில் பயணம் செய்தால் டிராப்பிஸ்டை சென்று அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். நாசா விண்கலத்தில் மணிக்கு சுமார் 28,000 கி.மீ., வேகத்தில் பயணித்தால் டிராப்பிஸ்டை சென்றடைவதற்கு 15 லட்சம் வருடங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
வாயேஜர் 1 விண்கலம்:
நாசா மூலம் விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர் 1 என்ற விண்கலம் தான் தற்போது பூமியிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. அது தற்போதும் அசுர வேகத்தில் விண்வெளியில் பாய்ந்து கொண்டுள்ளது. சூரிய குடும்பத்தை விட்டு முற்றிலுமாக விலகி நட்சத்திர மண்டலத்தில் அது தற்போது மணிக்கு சுமார் 60,000 கி.மீ., வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதே வேகத்தில் இது நிற்காமல் சென்றாலும் டிராப்பிஸ்டை அடைய 6,85,000 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும்.
எனவே நம் வாழ்நாளில் நினைத்து கூட பார்க்க முடியாத தூரத்தில் டிராப்பிஸ்ட் 1 நட்சத்திர குடும்பம் அமைந்துள்ளது. செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய நாசா விஞ்ஞானிகள் டிராப்பிஸ்டை சென்றடைவதற்கு நாசா மூலமாக விண்கலத்தை அனுப்பினால் சராசரியாக எட்டு லட்சம் ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறியுள்ளனர்.