தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து, கருத்து தெரிவித்த சுப்பிரமணியசாமி, ‘தமிழ் பொறுக்கிகள்’ என்று கூறியதற்கு கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறினார். இதற்கு சுப்பிரமணியசாமி- கமல் இடையே டுவிட்டரில் மோதல் வலுத்துள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எலும்பில்லாத, பகட்டான முட்டாள் கமல்ஹாசனை எதிர்ப்பேன்’
என்று கூறினார். இதற்கு கமல்ஹாசன், டுவிட்டரில், 'விவாதிக்கக் கூடிய எலும்பு என்னிடம் உள்ளது. தமிழர்களை பொறுக்கி என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். இதற்காக நான் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. மக்கள் தெரிவிப்பார்கள்' என்று தெரிவித்தார். மேலும் அவர், 'என் பதிலில் முரட்டுத்தனம் இருக்காது. மோசமான அரசியல் பரிமாற்றங்களில் என்னை விட அவருக்கு அனுபவம் அதிகம். அவருக்கு வேண்டுமானால் உணவில் எலும்பு இல்லாதது பிடிக்கலாம். எனக்கு அப்படி அல்ல. சந்தோஷமாக சாப்பிடுங்கள் சார் என்று கேலி செய்து பதிவிட்டுள்ளார்.