உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணைக்கட்ட மாட்டோம் என்று காவிரி நடுவர்மன்ற தொழில்நுட்பக்குழு கூட்டத்தில் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுவின் மாதாந்திரக் கூட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை
செயலாளர் அமர்ஜித் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகா செயல்படாது என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை நீரை வழங்க வேண்டும் எனவும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மேற்பார்வைக் குழுவின் அடுத்த கூட்டம் மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.