உ.பி., தேர்தலில் பணப் பறிமுதல் அதிகரிப்பு தண்ணீராக ஓடிய சாராயமும் சிக்கியது !!

 சட்டசபை தேர்தல் நடக்கும் உ.பி., உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் கடந்த சட்டசபை தேர்தலை விட தற்போது அதிகளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை; உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அங்கு தீவிர சோதனை நடைபெற்றது. இதில்

இதுவரை ரூ.115.70 கோடி ரொக்க பணம், 20.29 லட்சம் பாரல்கள் சாராயம், 2,725 கிலோ போதை பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 2012 சட்டசபை தேர்தலின் போது ரூ.36.29 கோடி ரொக்க பணம், 3,073 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.ஒரே கட்டமாக, நடக்கும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடந்த சோதனையில் இது வரை ரூ.3.40 கோடி ரொக்க பணம் ரூ.1.01 லட்சம் லிட்டர் சாராயம், 81 கிலோ போதை பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், கடந்த 2012ல் நடந்த தேர்தலில் ரூ.1.30 கோடி ரொக்க பணம், 15,151 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாபில் கடந்த தேர்தலின் போது ரூ.11.51 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது நடந்த முடிந்த தேர்தலின் போது, ரூ.58.02 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கோவாவிலும் அதிகளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீவிர முயற்சி: இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இதனை பார்க்கும் போது, கறுப்பு பணம் கையாள்பவர்கள் மற்றும் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை கவர முயற்சி செய்பவர்களுக்கு ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் எவ்வகையிலும் பாதிக்கவில்லை என தெரிகிறது.

 இதனை கட்டுப்படுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...