வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார். எனவே அவரது பெயரை வழக்கில் இருந்து நீக்கும்படி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது.
இது சம்பந்தமாக கர்நாடகா அரசு வக்கீல் ஆச்சார்யா கூறியதாவது:-
சொத்து குவிப்பு வழக்கில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் இதை சுப்ரீம் கோர்ட்டுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். எனவே இதற்கான சிறப்பு மனு ஒன்றை நாளை (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம்.
அதில் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட தகவலை கூறி வழக்கில் இருந்து அவரை பெயரை எடுத்து விடும்படி வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.
முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்து விட்டாலும் மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். எனவே மற்ற 3 பேருடைய பெயர்களும் தொடர்ந்து நீடிக்கும். அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும். அவர்கள் 3 பேரும் தவறு செய்ததற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன.