பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றன. பெரிய அளவிலான இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதாலும் வட்டி விகிதங்கள் குறைந்துவருவது போன்ற காரணங்களாலும் இத்துறை நிறுவனங்களுக்கு தொடர் இழப்பு ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரீமிய கட்டணங்களை
உயர்த்துவதன்மூலம் இழப்பீடுகளைச் சமாளிக்க காப்பீட்டு நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன. அதேபோல, நிகர லாப வரம்பை நிலைநிறுத்தும்வகையில் 10 முதல் 15 சதவிகிதம் வரை பிரீமிய கட்டணங்களை உயர்த்தவும் இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மேலும் பொதுக் காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பாக, மூன்றாம் நபர் வாகனக் காப்பீடு மற்றும் குழு மருத்துவக் காப்பீடு வசதிக்கான பிரீமியம் காப்பீட்டு கட்டணங்களை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. காப்பீட்டு நிறுவனங்களின் இந்த கட்டண உயர்வு முடிவுக்கு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து, இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.