கமல் பரபரப்பு : அரசியல் எண்ட்ரிக்கு ஆலோசனை அழைப்பா?

நடிகர் கமல், சில மாதங்களாக தமிழக அரசியலில் தீவிரமாக இயங்கி வந்ததை அனைவரும் அறிவார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் முதல் நெடுவாசலில் நடைபெறும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் வரை, அவரது ஒவ்வொரு ட்வீட்டும் சர்ச்சையை உருவாக்கியவை. அதிலும் தேசிய ஊடகங்களுக்கு (மட்டும்) அவர் கொடுத்த பேட்டிகள் பரபரப்பை

உண்டாக்கியதற்கும் சாட்சிகள் நாம்தான். அப்போதிருந்தே கமலை துரத்திவந்த கேள்வி **அரசியலுக்கு வருவீர்களா?** என்பதுதான்.

தனது அரசியல் பிரவேசம் பற்றி நேரடி பதில்களைக் கொடுக்காமல் இருந்துவந்த கமல், நாளை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கத் தவறவில்லை. திடீர் வழக்கறிஞர்கள் ஆலோசனையும், அதைத் தொடர்ந்த பிரஸ் மீட்டுமென வெளியான தகவல் எந்த வேகத்துக்குப் பரவியதோ, அதே வேகத்துக்கு உண்மை என உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் 50 - 50.

கமல் நாளை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தப் போகிறார் என்பது உறுதி. ஆனால் அது அரசியல் பிரவேசத்துக்கான ஆலோசனையா? என்றால், இல்லை. நாளை பத்திரிகையாளர்கள் கமல் வீட்டுக்குச் செல்லப்போவது உறுதி. ஆனால் பிரஸ்மீட் கொடுக்கப்போகிறாரா? என்பது உறுதி அல்ல.

கமலின் சமீபத்திய அரசியல் ட்வீட்டுகளின்பின், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை செய்ததாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் நலமாக இருக்கிறார்கள் என கமல் தெரிவித்திருந்தாலும், சிறையில் இருக்கும்வரை அது கமலின் இமேஜுக்கு விழும் மிகப்பெரிய அடி. ஆனால் கமலின் எந்த முயற்சியும் பலிக்காமல் அவர்கள் சிறையில் இருப்பதால் இந்த சூழ்நிலையைப் பற்றிப் பேசவும், எதிர்காலத்தில் இப்படி ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் தனது ரசிகர் மன்றத்தினரை பாதுகாக்கவும் இந்த கமல் நற்பணி மன்ற வழக்கறிஞர்கள் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் மாவட்ட வாரியாக ரசிகர்களையும் ரசிகர் மன்ற வழக்கறிஞர்களையும் மட்டும் சந்திக்கிறார். சினிமா மற்றும் பொது விஷயங்கள் பற்றியும் தன்மீதான இணையதள விமர்சனங்கள் பற்றியும் கலந்து பேசுகிறார்.

விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையில் கமலைப்பற்றி பாரதிராஜா பேசியபோது, கமலுக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்லாதீங்க. வந்தான்னா முழுசா கத்துக்கிட்டு வருவான். தாங்க மாட்டீங்க என்று சொல்லியிருந்தார். கடந்த ஏழு நாட்களாக கமல் ட்விட்டரிலும் அதிகம் இயங்காமல் இருந்தநிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வந்ததால் அனைவரும் பதட்டமாகியிருக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...