ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் வாபஸ் ஆகிறது ?

புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஒரு பிரிவு மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மாவட்ட கலெக்டருடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. நெடுவாசல் பகுதி மக்களும் நாளை போராட்டத்தை வாபஸ் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



கடந்த 15 நாட்களுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் கோட்டைக்காடு மற்றும் நெடுவாசலில் அதிகம் மக்கள் பங்கேற்றிருந்தனர்.


இந்நிலையில், ஆலங்குடியில் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் பேச்சு நடந்தது. இதில் கடந்த 9 மாதத்திற்கு முன்னதாக தோண்டப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூட ஒத்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கோட்டைக்காடு மக்கள் போராட்டத்தை கைவிட சம்மதம் தெரிவித்தனர்.

நாளை நெடுவாசல் மக்களிடம் கலெக்டர் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார். இங்கும் நாளை போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...