பேட்டரி இல்லாத செல்போன்கள்!!!


ஸ்மார்ட்போன் வருகையைத் தொடர்ந்து இன்றைய இளைஞர்களின்
பெரிய கவலை என்னவென்றால், செல்போனில் சார்ஜ் தீர்ந்து போவதுதான். ஏனெனில், உலகமே செல்போன் மையமாக மாறிய காலத்தில், அது இல்லாமல் இருப்பது அவர்களுக்குச் சாத்தியமாகாது. அதனால், சார்ஜ் போகாத செல்போன் அல்லது பேட்டரியே இல்லாத செல்போன் கிடைக்குமா என ஏக்கம் கொண்டிருக்கும் பயனாளர்களுக்காக உலகின் பேட்டரி இல்லாத முதல் செல்போனை அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பேட்டரி இல்லாத செல்போன்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுற்றுப்புறத்தில் உள்ள ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையில் புதிய செல்போன் ஒன்றை வடிவமைத்து புதிய சாதனை படைத்துள்ளனர். அந்த செல்போனைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் வீடியோ கால் பேசலாம் என்பதையும் நிரூபித்துள்ளனர்.

ஆய்வாளர்கள், ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகையில் இதுகுறித்து விவரித்துள்ளனர். ஆய்வுக்குழுவைச் சேர்ந்த ஷ்யாம் என்பவர் பேசுகையில், “மிகக் குறைந்தளவில் ஆற்றலைப் பயன்படுத்தும் செல்போன்களை எங்களது குழுவினர் வடிவமைத்துள்ளனர். மக்களின் அத்தியாவசியத் தேவையாக செல்போன் மாறிவிட்டது. அந்த செல்போனில் ரேடியோ அலைகளில் இருந்து ஆற்றலைப் பெறும் வகையில் செல்போன்களில் சிறிய அளவிலான ஆன்ட்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த அலைகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளைப் பரிமாறிக் கொள்ளலாம்.

முதற்கட்டமாக ரேடியோ அலைகளை அனுப்பும் பிரத்யேக மையங்கள் மூலம் செல்போனுக்கு இன்கமிங், அவுட்கோயிங் கால்கள் மற்றும் இணையதள இணைப்பு ஆகியவற்றை குழுவினர் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். மேலும், இதன்மூலம் 50 அடி தொலைவில் இருந்தும் தொடர்புகொள்ள முடியும். இந்த செல்போன் விற்பனைக்கு வரும்போது வைஃபை அல்லது செல்போன் சேவைக்காகப் பயன்படுத்தப்படும் அலைவரிசை ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும். இந்த ஆராய்ச்சிக் குழு பேட்டரி இல்லாத செல்போனின் இயக்க வரம்பை மேம்படுத்துவதற்கும், அவற்றை பாதுகாப்பதற்காகவும் தங்களது கவனத்தைச் செலுத்தவுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...