சென்னை : அதிமுக அணிகள் இணைப்பு குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காமல்
தினகரன் அமைதியாக இருப்பது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை எழுப்பிய நிலையில் உடல்நலக் குறைவால் ஓய்வில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதிமுகவின் அணிகண் இணைப்புக்கு டிடிவி. தினகரன் அவகாசம் கொடுத்த போது சேராத ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் இன்று ஒன்று சேர்ந்து தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். அதிமுக அணிகள் இணையப் போவதாக செய்திகள் வெளியானதால் காலை முதலே தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனையின் ஈடுபட்டார்.
ஆலோசனை முடிந்து வந்த தினகரன் ஆதரவாளர்கள், தினகரன் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பார் என்று தொடர்ந்த பீடிகை போட்டு வருகின்றனர். இந்நிலையில் தினகரன் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இத்னிடையே உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், தொண்டை வலியால் மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருப்பதாகவும், வரும் 23-ந் தேதி செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்றும் மீடியா நண்பர்களுக்கு என்று பதிவிட்டு சமூக வலைதளத்தில் தினகரன் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்