இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் அதிக வெப்பநிலை, குறைந்த மழை அளவு போன்ற தட்பவெப்ப நிலை மாற்றத்தால் 59,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதியிலேயே இந்த தற்கொலைகளும், கால நிலை
மாற்றமும் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா பல்கலை., நடத்திய சமீபத்திய ஆய்வில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காலநிலை மாற்றத்தால் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் விவசாய உற்பத்தி அதிக அளவில் நடக்கும் காலங்களில் வெப்பநிலை அதிகரிப்பு, மழை இல்லாமல் போனதால் ஒரு டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் ஒரே நாளில் 65 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் வெப்பத்தின் அளவு ஒரே நாளில் 5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்கும். அப்போது உயிரிழப்புக்களும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.