போலீஸ் பயிற்சி பள்ளி பணி; ஆர்வம் காட்டாத அதிகாரிகள்!!!


தமிழக போலீஸ் பயிற்சி பள்ளியில், பணிக்கு வர இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள் ஆர்வம்
காட்டாமல் இருப்பது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், போலீஸ், சிறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, 15 ஆயிரத்து, 711 இரண்டாம் நிலை காவலர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, உடல் தகுதி தேர்வு, இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
’மாமூல்’
வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பயிற்சி துவங்க உள்ளது. இதற்காக, தமிழகத்தில் எட்டு நிரந்தர போலீஸ் பயிற்சி பள்ளிகளுடன், கூடுதலாக, 32 தற்காலிக போலீஸ் பயிற்சிபள்ளிகளை ஏற்படுத்த முடிவு செய்து, அதற்கான பணிகளை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
இதன்படி, ஒரு பயிற்சி பள்ளிக்கு, டி.எஸ்.பி., தலைமையில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், நான்கு எஸ்.ஐ.,க்கள், 16 போலீசார் வேண்டும். தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளிகளில், அதிகாரிகள், போலீசாரை நியமனம் செய்ய, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், இந்த பணிக்கு வர, டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் மத்தியில் ஆர்வம் இல்லை. பயிற்சி பள்ளி பணிக்கு சென்றால், தற்போது தேர்வாகும் போலீசாருக்கு ஆறு மாத பயிற்சி, தொடர்ந்து, தமிழ்நாடு போலீஸ் இளைஞர் படையினருக்கு, மூன்று மாத பயிற்சி என, ஒன்பது மாதங்கள், பயிற்சி பள்ளிகளிலேயே பணியாற்ற வேண்டும். அதனால், தங்களின், ’மாமூல்’ வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், பயிற்சி பள்ளி பணி என்றாலே, அதிகாரிகள் மட்டுமின்றி போலீசாரும், அலறியடித்து ஓடுகின்றனர்.
விருப்பமில்லை
இது குறித்து, டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது: போலீஸ் பயிற்சி பள்ளிக்கு, தற்போதைய நிலையில், 40 டி.எஸ்.பி.,க்கள், 80க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 800 போலீசார் தேவைப்படுகின்றனர். பயிற்சி பள்ளிகளில் பணியாற்ற, விருப்ப மனு கோரப்பட்டது.
இதில், 10 டி.எஸ்.பி.,க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், 200 போலீசார் மட்டுமே விருப்பம் தெரிவித்து உள்ளனர்.ஏற்கனவே, பயிற்சி பள்ளியில் பணியாற்றியவர்களை மீண்டும், அதே பணிக்கு நியமிக்கவும், அதில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு, அந்தந்த மாநகர, மாவட்ட ஆயுதப்படைகளில் இருந்து போலீசாரை நியமிக்கவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...