போயஸ் கார்டன் யாருக்கு?: ஜெயலலிதாவே சொன்ன பதில்


அது சாதா நிலையம் அல்ல... தமிழ்நாட்டு அரசியலின் சுமார் நாற்பது

வருட சாட்சியாக இருக்கிற வேதா நிலையம். ஜெயலலிதா என்ற சிங்கத்தின் குகை. கடந்த எட்டு மாதங்களாக அந்தச் சிங்கம் இல்லாத நிலையில், போயஸ் கார்டனை கரகாட்டக்காரன் கார் ரேஞ்சுக்கு கேலிச் சித்திரமாக்கிவிட்டனர் அவரது வாலண்டியர் வாரிசுகள்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி போயஸ் கார்டன் இல்ல வாசலில் தீபாவும் தீபக்கும் மாறி மாறி வீசிக்கொண்ட வார்த்தைகளை லைவ் பார்த்து நொந்துகொண்டனர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவில்லம் ஆக்கப்படும் என்றும் நேற்று ஆகஸ்டு 17ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த அறிவிப்பை பலரும் அரசியல் ரீதியாக பார்க்கும் நிலையில் அரசியல் ரீதியாக மட்டுமின்றி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற வகையில் இதை தனிப்பட்ட முறையிலும் கடுமையாக எதிர்த்துள்ளார் ஜெ.தீபா.

இதுதொடர்பாக நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, “போயஸ் இல்லம் எங்களின் பூர்வீகச்சொத்து. அதை எக்காரணம் முன்னிட்டும் விட்டுக்கொடுக்க முடியாது. பதவி ஆசைக்காகவே முதலமைச்சர் பழனிசாமி இப்படியெல்லாம் அறிவிப்பு செய்கிறார். இந்த அறிவிப்பை எதிர்த்து நான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன்’’ என்று அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்து, பூர்வீகச்சொத்தா... ஜெயலலிதாவுக்குப் பிறகு அது யாருக்குச் சேரவேண்டியது என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகள் இப்போது நம்முன் நிற்கின்றன.



இந்த முக்கியமான கேள்விகளுக்கு ஜெயலலிதாவே நமக்கு பதில் சொல்லியிருக்கிறார். ஆம், ஜெயலலிதா கடைசியாக போட்டியிட்டது கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, அதற்காக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மதியம் 12.15 மணிக்கு தண்டையார் பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

தேர்தலில் போட்டியிடும் ஒருவர் வேட்புமனுவோடு, சேர்த்து தாக்கல் செய்யும் அபிடவிட்டில் தன்னைப் பற்றிய முழு விவரங்களைத் தெரிவித்தாக வேண்டும். அதாவது தனது கல்வித் தகுதி, சொத்து விவரங்கள், அந்த சொத்து பூர்வீகச்சொத்தா அல்லது புதிதாக வாங்கப்பட்ட சொத்தா, தனது வாழ்க்கைத் துணை, தன்னை சார்ந்து வாழ்வோர் யார் போன்ற முக்கியமான விவரங்கள் அந்த அபிடவிட்டில் இருக்கும்.

அந்த வகையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்துக்கு தனது அபிடவிட்டில் தெரிவித்துள்ள விவரங்கள் தற்போது எழும் பல கேள்விகளுக்குப் பதிலளிப்பதாக உள்ளது.

ஜெயலலிதா தேர்தல் அலுவலர் பத்மஜா தேவியிடம் கையெழுத்திட்டு நேரில் தாக்கல் செய்த அவரது வேட்புமனு அபிடவிட்டில் தனது வருமான வரி பான் கார்டு விவரம், தனக்கு வங்கிகளில் இருக்கும் டெபாசிட் தொகை பற்றிய விவரம், தன்னிடம் இருக்கும் சொந்த வாகனங்கள் பற்றிய விவரம், தனது அசையா சொத்துகள் பற்றிய விவரம் ஆகியவற்றை தெளிவான விவரங்களோடு குறிப்பிட்டு, மேற்கண்ட தகவல்கள் எல்லாம் உண்மை என்றும் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்.

அந்த அபிடவிட்டின் ஒவ்வோர் இடத்திலும் ஸ்பவுஸ் அதாவது வாழ்க்கைத் துணை என்ற பெயரில் யாருமில்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஜெயலலிதா, டிபென்டண்ட்ஸ் அதாவது தன்னை சார்ந்திருப்போர் என்ற இடத்திலும் தன்னைச் சார்ந்தோர் யாரும் இல்லை என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இந்த அபிடவிட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால்... அதில் தனது சொத்துகளைப் பற்றி தெரிவிக்கும்போது பூர்வீகச்சொத்து என்றால் அது யாரிடம் இருந்து எப்போது வாங்கப்பட்டது என்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்த சொத்து பூர்வீகச்சொத்து இல்லை என்றால் எந்தத் தேதியில் என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

அந்த வகையில் போயஸ் கார்டன் வீடு தனது பூர்வீகச்சொத்து அல்ல என்றும், தான் உழைத்து வாங்கியது என்றும் வேட்புமனு அபிடவிட்டில் தெரிவித்திருக்கிறார்.

தேனாம்பேட்டை கிராமம் சர்வே எண் 1567 கொண்ட 81, போயஸ் கார்டன் இல்லம் எனது பூர்வீகச்சொத்து அல்ல. மொத்தப் பரப்பு 24 ஆயிரம் சதுரடி அடி, கட்டுமான பரப்பு 21,662 சதுர அடி கொண்ட இந்த வீட்டை 15-7-1967 அன்று ஒரு லட்சத்து 32 ஆயிரத்து ஒன்பது ரூபாய்க்கு வாங்கியதாக ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். ஆக... ஜெயலலிதா வசித்துவந்த போயஸ் கார்டன் வீடு அவருடைய பூர்வீகச்சொத்து அல்ல. அது அவராலும், அவரது அம்மாவாலும் வாங்கப்பட்டது.

மேலும், அதே போயஸ் கார்டனில் சர்வே எண் 1567/1 கொண்ட 79, போயஸ் கார்டன் முகவரி கொண்ட

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...