இருசக்கர வாகன உற்பத்தியில் ஹோண்டா நிறுவனத்துக்கு
இந்தியா இரண்டாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஹோண்டா நிறுவனத்தின் சர்வதேச உற்பத்தியில் இந்தியா 37 சதவிகிதம் பங்களிப்பை அளித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் தகவல்களின் படி, ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 20 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் இருசக்கர வாகன விற்பனை 9 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதில், ஸ்கூட்டர்களின் விற்பனை 19 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மோட்டார்சைக்கிள்களின் விற்பனை 20 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி இரண்டுமே அடங்கும். இதுகுறித்து ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவின் துணைத் தலைவர் ஒய்.எஸ்.குலிரியா பேசுகையில், “ஹோண்டா நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
