அசல் ஓட்டுநர் உரிமம்: தலையிட ஐகோர்ட் மறுப்பு!!


வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம் என்ற உத்தரவில்
தலையிட சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.வாகன ஓட்டிகள் அனைவரும், செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறினார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி கூறுகையில், செப்., 1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம் தான் எனக்கூறி, அரசின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறினர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...