முகலாயர்கள் அத்தியாயம் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கம்!


எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு வரலாற்று பாடப் புத்தகங்களிலிருந்து இந்தியாவில் முஸ்லிம்
ஆட்சியாளர்கள் மற்றும் முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்களை மகாராஷ்டிரா மாநில கல்வி வாரியம் நீக்கியுள்ளது. அதற்குப் பதிலாக தற்போது மராத்தா போர் வீரர் சிவாஜியின் பேரரசில் கல்வி வாரியம் கவனம் செலுத்துகிறது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்தின் சமீபத்திய பதிப்பில் முகலாயர்கள் மற்றும் முஸ்லிம் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால், குதுப்மினார் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான வரலாற்று பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படவில்லை.

இருப்பினும், பாடப்புத்தகங்களில், காங்கிரஸ் தலைமையிலான நிர்வாகங்களுடன் தொடர்புடைய போஃபர்ஸ் மோசடி மற்றும் 1975 -1977 வரையிலான நெருக்கடி நிலை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

இதனால், வலதுசாரி நிர்வாகத்தைக் குற்றஞ்சாட்டி விமர்சகர்களால் சமீபத்தில் உரைநூல் உள்ளடக்கம் விவாதிக்கப்பட்டது. நவீன நிகழ்வுகளுடன் வரலாற்றைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம். முகலாய வரலாறு குறைக்கப்பட்டுள்ளது. நவீன வரலாற்றை மட்டும் தற்போது இணைக்க வேண்டும் என பாடப்புத்தகத்தின் இரண்டு பதிப்புகளுக்கான வரலாற்றுக் குழுவின் உறுப்பினரான கோலாபூரை சேர்ந்த பாபுசாஹேப் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு மாநிலக் கல்வி அமைச்சர் வினோத் தவாட் ரம்பா மல்கல் பிரபாதினியின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அப்போது, பாடத் திட்டத்தின் திருத்தங்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஷிண்டே தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...