பிஎம்ஜிகேஒய் திட்டத்தின் கீழ் 21 ஆயிரம் பேர் ரூ. 4900 கோடி கருப்பு பணம் உள்ளதாக அரசிடம் தகவல்!!

  கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையாக கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். புழக்கத்தில் உள்ள நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டனர். இதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவும் அளிக்கப்பட்டது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் அதை கணக்கில் கொண்டு வர பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்திருப்பவர்கள், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து, 50 சதவீத வரி மற்றும் அபராதம் செலுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இருந்து விலக்கு பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. 

அவ்வாறு செலுத்தப்படும் தொகையில் நான்கில் ஒரு பங்குத் தொகை, 4 ஆண்டுகளுக்கு வட்டியின்றி வைப்பு நிதியாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ் மார்ச் 31-ம் தேதி வரை கருப்பு பணத்தை டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி டெபாசிட் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 4900 கோடி ரூபாய் கருப்புப் பணம் உள்ளதாக 21 ஆயிரம் பேர் தகவல் அளித்து உள்ளனர் என அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார் என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

மார்ச் 31 வரையில் 21 ஆயிரம் பேர் 4900 கோடி ரூபாய் கருப்புப் பணமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர், 2451 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...