புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய உதவித்தொடக்க அலுவலரை சந்தித்த 2009& TET இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய
நிர்ணய படிவத்தை திரும்ப வழங்குமாறு திங்கள் கிழமை கோரிக்கை விடுத்தனர்...இது குறித்து ஊதிய மீட்புக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது:தமிழக அரசு தற்போது அமல்படுத்திய மத்திய அரசின் 7 வது ஊதிய குழுவில் FINANCE DEPARTMENT G.O.Ms.NO.303 நாள் அக்டோபர் 2017 அரசாணகயின் படி விருப்பக் கடிதம் கொடுக்க 3 மாத கால அவகாசம் உள்ளது..நிதித்துறை செயலாளர் கடித எண் 54867/CMPC/2017-1 ன் படி நவம்பர் 20 ஆம் தேதிக்குள் pay fixation option form விருப்ப கடிதம் பெற்று அக்டோபர் மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என குறிப்பிடப் பட்டு இருந்தது...2009 க்குப் பின்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 ஆவது ஊதிய குழு முரண்பாடுகள் களையப்படாமல் இருந்து வருகிறது.இதனை எதிர்த்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது...வழக்கு எண் WP:28558/2017.அந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விருப்பக் கடிதம் கொடுக்க 3 மாத கால அவகாசம் உள்ளது..எனவே அதுவரை விருப்பக் கடிதம் உடனே கொடுக் க வேண்டும் என யாரையும் வற்புறுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்..ஆகவே இடைநிலை ஆசிரியர்களாகிய நாங்கள் தற்போது கொடுத்துள்ள ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப வழங்குமாறு உதவி தொடக்க கல்வி அலுவரை கேட்டுக் கொண்டோம்..அதுவரை புதிய ஊதிய குழுவில் எங்களுடைய ஊதியத்தை நிர்ணயம் செய்யப்படாமல் பழைய ஊதிய குழுவிலேயே ஊதியம் தொடர நாங்கள் சம்மதிக்கிறோம்...மேலும் அரசு வழங்கிய 10.01.2018 காலக்கெடுவுக்குள் தாங்கள் விருப்பக் கடிதம் அளிக்க சம்மதிக்கிறோம் என உதவி தொடக்க கல்வி அலுவரை கேட்டுக் கொண்டோம்..இதனை பொறுமையாக கேட்ட உதவித் தொடக்க அலுவலரும் இடைநிலை ஆசிரியர்கள்ஒரே நாளில் அவரவர் தனிப்பட்ட முறையில் கடிதம் அளித்து பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.*இவண்..அன்னவாசல் ஒன்றிய 2009@TET ஊதிய மீட்புக் குழு இடைநிலை ஆசிரியர்கள்..
