தேசிய நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட்-பி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: சயின்டிஸ்ட்-பி
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100/-
கல்வித் தகுதி: மைக்ராலஜி, வைராலஜி ஆகிய ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் அல்லது இரண்டாம் வகுப்பில் முதுகலை பட்டத்துடன் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். அதோடு சம்பந்தப்பட்ட துறையில் மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி: 11.04.2018
மேலும் விவரங்களுக்கு http://nie.gov.in/images/careers/Feb18FinalWebsiteAdvertisementScientistBforLab90.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்
