அரசு பள்ளி மாணவனுக்கு எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்தது!!

📗📗📗📗📗📗📗📗📗📗


*🔵திட்டக்குடி அரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவருக்கு
இன்று எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ளது. அவர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்*

*🔵அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். தகுதி மதிப்பெண் பெற்றால் அரசு ஒதுக்கீட்டில் சேர முடியாது.

*🔵மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள் தான் அதிக மதிப்பெண் பெற்று இருந்தனர்*


*🔵மருத்துவ கலந்தாய்வு கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது*


*🔵நாளையுடன் முதல் கட்ட கவுன்சிலிங் நிறைவடைகிறது. சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவ கல்லூரிகள், கோவை, மதுரை, சேலம் போன்ற மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பி விட்டன*


*🔵இந்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவருக்கு இன்று எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி மா.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவரின் பெயர் அலெக்ஸ்பாண்டியன். அவர் பிளஸ்-2 தேர்வில் 1111 மதிப்பெண் பெற்றார்*


*🔵டாக்டராக வேண்டும் என்று லட்சியத்துடன் படித்த அலெக்ஸ் பாண்டியனை அரசு நடத்தும் நீட் பயிற்சிக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒரு மாதம் பயிற்சி பெற்று தேர்வு எழுதினார். நீட் தேர்வில் 720-க்கு 306 மதிப்பெண் எடுத்திருந்தார்*

*🔵எம்.பி.பி.எஸ். கனவு நிறைவேறுமா? என்ற ஏக்கத்துடன் விண்ணப்பித்தார். இன்று 5-வது நாளாக நடந்த கலந்தாய்வில் அலெக்ஸ் பாண்டியனுக்கு எம்.பி.பி.எஸ். சேருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்*

*🔵அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் மாணவர் ஆனந்த கண்ணீர் விட்டார். அவரது பெற்றோர்களும் கலங்கினார்கள்*

*🔵அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவருக்கு முதன் முதலாக எம்.பி.பி.எஸ். சீட் இப்போது கிடைத்துள்ளது. இதனை மிகப்பெரிய சாதனையாக மாணவரின் பெற்றோர் கருதினார்கள்*

*🔵இதுபற்றி மாணவர் அலெக்ஸ்பாண்டியன் கூறியதாவது*

*🔵நான் மங்களூர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்தேன்*
எனது ஆசிரியர்கள் முயற்சியால் அரசின் நீட் பயிற்சியினை மேற்கொண்டேன். எனது வெற்றிக்கு பள்ளியின் ஆதரவும், பெற்றோரின் ஒத்துழைப்பும் தான் காரணம். கிராமங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்பதற்கு நான் ஒரு எடுத்து காட்டு*
*🔵நான் டாக்டராகி கிராமப் புறங்களில் உள்ள ஏழைகளுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்*
இவ்வாறு அவர் கூறினார்*
*🔵மாணவர் அலெக்ஸ் பாண்டியனின் தந்தை தங்க ராஜன் சத்துணவு அமைப்பாளர்*




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...