உடலுறுப்புகளை இழந்தவர்களுக்குத் தொடு உணர்வு!


உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம், தொடு உணர்வை ஏற்படுத்தி சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வர்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம், இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவதாகும். பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுக்காகவே இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது விபத்துகளில் கை கால்களை இழந்தவர்கள், தாங்கள் இழந்த உடல் பாகங்கள் உணரும் புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக விபத்துகளில் கை கால்களை இழந்தவர்களுக்கு, அதுபோன்ற செயற்கை உறுப்புகள் பொருத்தப்படும். இந்தச் செயற்கை உறுப்புகள் போலியானது. இவற்றால் உணர்வை ஏற்படுத்த முடியாது. இதற்கு மாற்றாக, உடலுறுப்புகளை இழந்து தவிக்கும் மக்களுக்காக சுவிட்சர்லாந்தில் உள்ள எக்கோல் பாலிடெக்னிக் பிடெரலே டே லாசன்னே ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புதிய சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் தொடு உணர்வை ஏற்படுத்தி, இதன் மூலமாக உறுப்பு பாகங்கள் உண்மையாகவே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்தச் சாதனத்தைக் கையில் பொருத்திக்கொண்டு, பிரத்யேக கண்ணாடியை அணியும்போது, நரம்புகள் தூண்டப்பட்டு தொடு உணர்வை உணரலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப சாதனத்தின் மூலம் தொடு உணர்வை ஏற்படுத்தும் விதம் குறித்து வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...