தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த 14 செயற்கைகோள் : இஸ்ரோ

தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் வகையில், 14 செயற்கைகோள்களை, விண்ணில் செலுத்த, இஸ்ரோ முடிவு செய்துள்ளது.இது குறித்து, இஸ்ரோ வட்டாரங்கள் கூறியதாவது:நடப்பு, 12 வது திட்டத்தில், தகவல் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தும் வகையில், 14 வகையான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மொபைல்போன் தகவல் தொடர்பு திறனை அதிகரிக்கும் வகையில், அதிகத் திறனுள்ள, "எஸ் பாண்ட்' செயற்கைகோள் மற்றும் புதிய தலைமுறையினருக்கான, "ஜியோ-இமேஜ்' செயற்கைகோள் மற்றும் அகண்ட அலைவரி திறமை மேம்படுத்தும் வகையில் ,"விசாட்' மற்றும்,
"கே பாண்ட்' ஆகியவை அறிமுகப்படுத்தப் படவுள்ளது.இப்புதிய செயற்கைக்கோள்களை செலுத்துவதன் மூலம், தேவைக்கும், வினியோகத்துக்கும் உள்ள இடைவெளி பெருமளவில் குறையும்.இவ்வாறு இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
58 விண்வெளி திட்டம்:நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில், 58 திட்டங்கள் நிறைவேற்றப் படவுள்ளன. இவற்றில், 33 திட்டங்கள், செயற்கைகோள்களை செலுத்துவது தொடர்பானவை. 25 திட்டங்கள், ராக்கெட் அனுப்புவது குறித்தவை.

டி.டி.எச்., சேவை, செயற்கைகோள் தகவல் தொடர்பு போன்றவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அவற்றை சமாளிக்கும் வகையில், கூடுதலாக, 400 டிரான்ஸ்பாண்டர்களை நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு, இஸ்ரோ சார்பில், விண்கலங்கள் அனுப்பப் படவுள்ளன.வெள்ளம், புயல் உள்ளிட்ட, இயற்கை சீற்றங்களை முன் கூட்டியே அறிந்து, தகவல் அனுப்பும் வகையில், பூமிக்கு மேல், 36 ஆயிரம் கி.மீ., உயரத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை நிலை நிறுத்தும் திட்டமும் செயல்படுத்தப் படவுள்ளது. ஒட்டு மொத்தமாக, நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, திட்டங்களை செயல்படுத்த, இஸ்ரோவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...